கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 1089 பணியிடங்களுக்கான நில அளவையர் வரைபட தேர்விற்கும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளுநர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையர் வரைவாளர் பணி காலி பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள வாயிலாகவும் மருந்தாளுநர் பணி காலி பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த தேர்வுகளுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் விதமாக அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற இருக்கின்றது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நில அளவையர் வரைபட அல்லது மருந்தாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பிதாரர்கள் விண்ணப்பம் நகல் புகைப்படம் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களுடன் கள்ளக்குறிச்சி 18/63 நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிறை வழிகாட்டு மையத்தின் நேரில் தொடர்பு கொண்டு தங்களின் விவரத்தை தெரிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் மேலே குறிப்பிட்டுள்ள தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.