Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே அதே பழசு தான.. இல்ல வானத்துல இருந்து வந்த புதுசா… தமிழக அரசை சீண்டிய டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறையை அம்மா ஆட்சியில் அவ்வளவு சுதந்திரமாக விட்டோம், அவர்களின் கடைமையை செஞ்சாங்க. இன்னைக்கும் அதே காவல்துறையினர் தானே. இல்ல ஆட்சி மாறி புது அரசு அமைச்சு இருக்குனு புதுசா வானத்தில் இருந்த வந்த வேற காவல் துறையா ? காவல்துறை பணி என்பது ஒரு கலை.

அம்மாவை பொறுத்த வரை, புரட்சி தலைவரை பொறுத்த வரை காவல்துறையில் எந்த ஒரு அரசியல் தலையீடு கிடையாது, சுதந்திரமாக செயல்பட்டாங்க, சட்ட ஒழுங்கை சிறப்பாக பராமரித்தார்கள். ஆனா இப்போ காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதில்லை. அதற்கான நடவடிக்கையை அரசு  எடுக்கவில்லை. இதனால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

இதனால் ரவுடிகள் ராஜ்ஜியம் உயர்ந்துள்ளது. பொது மக்களுக்கு, யாருக்கும் பாதுகாப்பு இல்லை. டிடிவி தினகரன் என்னைவிட நாகரிகமாக பேசி இருந்தார். நாகரிகமாக பேசினால் நானும் நாகரீகமாக பேசுவேன். நான் என்ன சொல்கிறேன் ? அவர்களோடு ஒட்டுமில்லை, உறவும் இல்லை. அதான் எங்களுடைய நிலை என தெரிவித்தார்.

Categories

Tech |