பார்வை அற்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு ரூ. 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலை கிடைத்து இருக்கிறது. பார்வையற்ற பொறியியல் பட்டதாரி ஆன யாஷ் சோனகியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைபெற்று சாதனை படைத்திருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வை அற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா கடந்த 2021ம் வருடம் இந்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்.
தற்போது யாஷ் சோனகியா 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளது அனைவருக்கும் மகிச்சியை அளித்துள்ளது. இதனால் சாதனை மாணவர் யாஷை கல்லூரி நிர்வாகம் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறது. அந்த கல்லூரியில் அதிகளவு ஆண்டு வருமானத்தில் வேலைபெற்ற மாணவர் யாஷ்தான் என கல்லூரி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர். சிறு வயதிலேயே கண்பார்வையை இழந்த யாஷ் விடா முயற்சியுடன் படித்து பொறியியல் பட்டம்பெற்றதோடு, மிகப் பெரிய மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுனத்திலும் வேலை பெற்றுள்ளார். யாஷின் இந்தசாதனை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறது.