Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு… செப்டம்பர் 2 முதல் 4 வரை… தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!!!

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 3236 பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதில் நடைபாண்டில் 2955 காலி பணியிடங்களும் ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்ற 251 பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கான திருத்தப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரையில் ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெற இருக்கின்றது. தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் அடுத்த கட்ட பணி தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும் அவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே இறுதி தேர்விற்கு உத்தரவாதம் இல்லை. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தின் வாசலில் கூட்டம் கூடுவதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திட வேண்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருவோர் அசல் சான்றிதழ்களை முன்னுரிமை கூறும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை போன்றவற்றில் ஒரு செட் சுய சான்றொப்பம் இட்ட நகல் அழைப்பு கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் போன்றவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும் கைபேசிகள் பைகள் போன்ற பொருட்களை கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் வளாகத்திற்குள் பெற்றோர்கள் சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக்கூடாது என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |