இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு, சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இரட்டை பெயர் பதிவு மற்றும் முறை வாக்காளர் பெயர் பல்வேறு இடங்களில் பதிவாகி இருக்கும் போன்ற குழப்பங்களை தடுத்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதி வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் இலவசமாக ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழக முழுவதும் இந்த பணி நடைபெற்ற வருவது குறிப்பிடத்தக்கது.