Categories
உலக செய்திகள்

மக்களின் இளவரசி டயானா…. 25 வருடங்களாக நீங்காத மர்மம்…. மரணத்தின் கடைசி நிமிடங்கள்….!!!!

இளவரசி டயானாவின் மரணம் இன்று வரை விலகாத மர்மமாகவே இருக்கிறது.

இங்கிலாந்தில் மக்களின் இளவரசி என்று அன்போடு அழைக்கப்பட்ட டயானா கடந்த 1961-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நார்போக் நகரில் ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுன்டஸிற்கு மகளாகப் பிறந்தார். இவர்களுடைய குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் என்று அழைக்கப்பட்டது. இளவரசி டயானா தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த பிறகு சுவிட்சர்லாந்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு லண்டனில் உள்ள கிண்டர் கார்டனில் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது தன்னைவிட 13 வயது பெரியவரான இளவரசர் சார்லஸை காதலிக்க தொடங்கினார். கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் காதலித்த இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லசுக்கு கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று, ஜூலை 29-ஆம் தேதி செயின்ட் பால் கதிட்ரல் சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது.

ஆனால் இளவரசி டயானா மற்றும் சார்லஸ் இன் திருமண வாழ்க்கை கசப்பாக அமைந்ததால் கடந்த 1992-ஆம் ஆண்டு பிரியலாம் என முடிவு செய்து, 1966-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் விவாகரத்து செய்து கொண்ட டயானா தன்னுடைய மகன்களை வளர்ப்பதிலும், சமூக சேவை செய்வதிலும் அதிக அக்கறை கொண்டிருந்தார். அப்போது எகிப்து நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன டோடி என்பவருடன் டயானா காதல் வசப்பட்டார். இவர்கள் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்வது மற்றும் டேட்டிங் செல்வது என இருந்தனர். இதன் காரணமாக டோடியின் குழந்தை டயானாவின் வயிற்றில் வளர்ந்தது.

கடந்த 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒரு கார் விபத்தில் இளவரசி டயானா மற்றும் டோடி இருவருமே உயிரிழந்தனர். ஆனால் டயானா உயிரிழந்தது விபத்தினால் அல்ல என்றும் அரச குடும்பம் தான்  டயானாவை திட்டமிட்டு கொலை செய்தது எனவும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கூறியிருந்தார். அதாவது இளவரசர் சார்லஸை பிரிந்த பிறகு டயானா வேறொருவருடன் காதல் வசப்பட்டு அவரின் கருவை சுமந்தது அரச குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. அதோடு அரசு குடும்பத்தின் அனைத்து ரகசியங்களையும் டயானா தெரிந்து வைத்திருந்தார். அதன்பின் டயானா டோடியின் கருவை வயிற்றில் சுமந்ததால் அது அரச குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதற்காக இளவரசர் பிலிப்பின் உத்தரவின் பேரில் டயானா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து டயானா சென்ற கார் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அவருடைய காதலுடன் ஒரு ஹோட்டலுக்கு உணவு அருந்ததற்காக சென்றுள்ளார். அப்போது புகைப்படக்காரர்கள் டயானாவையும் அவருடைய காதலனையும் தொடர்ந்து பின் தொடர்ந்ததால் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஹோட்டலின் பின்புறம் வழியாக சென்று காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். இருப்பினும் புகைப்படக்காரர்கள் அவர்களை விட்ட பாடில்லை. இந்நிலையில் டயானா சென்ற கார் ஒரு சுரங்க பாதைக்குள் நுழைந்த போது திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டோடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தை பார்த்த பிரெஞ்சு மருத்துவர் மைலிஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டயானாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அவருக்கு சிகிச்சை கொடுக்கும்போது அந்த பெண்மணி இளவரசி டயானா என்பது தெரியாது. இளவரசி டயானா மருத்துவப்மனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது தான் பிரெஞ்சு டாக்டருக்கு அவர் இளவரசி என்பதே தெரியவந்துள்ளது. அந்த மருத்துவர் இளவரசி டயானாவை காப்பதற்காகன அனைத்து உதவிகளையும் செய்தும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் தன்னுடைய வாழ்நாளில் மிகவும் சோகமான நாள் என்றும் சுரங்க பாதையில் இப்போது சென்றால் கூட இளவரசி டயானா உயிரிழந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது என்றும் டாக்டர் மைலிஸ் கூறியுள்ளார். மேலும் இளவரசி டயானா உயிரிழந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்தும் அவருடைய மரணம் இன்று வரை புரியாத ஒரு மர்மமாகவே இருக்கிறது.

Categories

Tech |