Categories
தேசிய செய்திகள்

“சீனாவில் இருந்து நுழைந்த ஆளில்லா ட்ரோன் விமானம்”… துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடிப்பு… பெரும் பரபரப்பு…!!!!!!

சீனாவில் இருந்து தைவான் கடல் எல்லைக்குள் ஆளில்லா ட்ரோன் விமானம் நுழைந்ததை தைவான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீன கடல் பகுதிகளில் அமைந்துள்ள தீவு நாடு தைவானாகும். ஆனால் தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருதி வருகின்றது. தேவை ஏற்படும் சூழலில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி கடந்த இரண்டாம் தேதி அரசு முறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றுள்ளார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசி உள்ளார். நான்சியின் இந்த பயணம் சீனாவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நான்சி பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் நான்கு முறை தைவானுக்கு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தென் சீன கடல் பரப்பில் தைவான் நாட்டிற்கும் சீனாவிற்கும் இடையேயான கடற்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு போர் கப்பல்கள் கடந்த 28ஆம் தேதி நுழைந்து இருக்கின்றது. தைவான் ஜலசந்தி பகுதியில் ஏவுகணை தாக்கி 2 போர்க்கப்பல்கள் தைவான் கடல் பகுதி வழியாக கடந்து சென்றுள்ளது. அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி கடல் பரப்பில் நுழைந்த சம்பவம் சீனாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த சூழலில் சீனாவில் இருந்து ஆளில்லா ட்ரோன் விமானம் இன்று தைவான் எல்லைக்குள் நுழைந்துள்ளது. தி அவானின் கின்மின் தீவு பகுதியில் அந்த ட்ரோன் வந்ததாகவும் அதனைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் கண்டறிந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தைவான் ராணுவம் கூறியுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய உடன் அந்த ட்ரோன் மீண்டும் சீனாவின் கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும் அந்த ஆளில்லா ட்ரோன் விமானம் ராணுவ பயன்பாட்டிற்கானது அல்ல எனவும் தைவான் ராணுவம் கூறியுள்ளது.

Categories

Tech |