நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் முதல் பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் அழகி மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் ஒரு காமெடி படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க, சாந்தி டாக்கீஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் போன்றவைகள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி ஆகிய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் பாடல் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் பிரின்ஸ் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.