Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்கள் முரணாக செயல்படுகிறார்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்…..!!!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்துதல் போன்ற அநீதிகளை எதிர்த்து போராடி உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில்  நமது நாட்டு மக்கள்  தினம் தோறும் தனியாகவும்   அல்லது பொது மக்களுடன்  சேர்ந்தும் ஏதோ ஒரு கொள்கைக்காக போராடி கொண்டுதான் இருக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் செங்கம், செய்யாறு ஆகிய கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட சிறப்பு தலைவர் முகமது மைனுத்தின் , மாநில இணை செயலாளர் ராமு, மாவட்ட செயலாளர் குமரவேல், மாவட்ட பொறுப்பாளர் மோகநாதன், மோகன், சத்யா உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |