Categories
மாநில செய்திகள்

“உரக்கடைகள் வேண்டாத வேலையை பார்க்க கூடாது”…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் எவ்வித தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண்மை உழவர் நலத்துறை பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உரம் இருப்பு மற்றும் வினியோகம் தொடர்பாக புகார் ஏதாவது இருந்தால் விவசாயிகள் 9363440360 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |