முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகிவருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து இருக்கின்றனர். திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “யசோதா” திரைப்படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்துள்ளார்.
இந்த படத்தை மணி ஷர்மா இசையமைத்துள்ளார். அத்துடன் எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதன்பின் மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத் தொகுப்பு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது, யசோதா படத்தின் டீசர் செப்டம்பர் 9ம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Happy #GaneshChaturthi 🙏🏼✨️😇
An enthralling Teaser of our #Yashoda ready to amaze you on Sep 9th @ 5:49PM🔥 Stay Excited 🤩#YashodaTheMovie @Samanthaprabhu2 @Iamunnimukundan @varusarath5 @harishankaroffi @hareeshnarayan #Manisharma @mynnasukumar pic.twitter.com/F4rE1Eaybh
— Sridevi Movies (@SrideviMovieOff) August 31, 2022