Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsPAK : பாகிஸ்தான் டி சர்ட் அணிந்து பார்த்த இந்தியர்…. வீட்டிற்கு வரும் மிரட்டல்…. அவர் அளித்த விளக்கம் என்ன?

பாகிஸ்தான் அணி டி சர்ட் அணிந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த உ.பி.யை சேர்ந்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் கடந்த 28ஆம் தேதி துபாய் மைதானத்தில் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.. பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததற்கு பழி தீர்த்துக் கொண்டது இந்திய அணி. இந்தப் போட்டியை காண மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் ரசிகர்கள் என மைதானமே கலை கட்டியது.

இந்த ஆசிய கோப்பை போட்டியின் போது உ.பியை சேர்ந்த இந்திய ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணி டீ சர்ட் அணிந்து மைதானத்தில் உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி டீ சர்ட் அணிந்து கொண்டு பார்த்ததால் தனது வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த 42வயதான சான்யம் ஜெஸ்வால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பலரைப் போலவே நானும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவாளன் தான். அமெரிக்காவில் இருந்து துபாய்க்கு வந்த எனது நண்பருடன் மைதானத்தில் இருந்து போட்டியை பார்க்க திட்டமிட்டிருந்தேன். மைதானத்தில் இந்திய அணியின்  டீசர்ட் தீர்ந்து போய்விட்டதால் பாகிஸ்தான் அணி உடையை வாங்கினேன். பாகிஸ்தான் உடையுடன் ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என கூச்சலிட்டு கிண்டலாக பிராங்க் செய்யலாம் என நினைத்து வாங்கினேன். நான் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்திருந்தாலும், என் கையில் இந்தியக் கொடியும் இருந்தது. என் அப்பா ஒரு இதய நோயாளி, எல்லா டென்ஷனில் இருந்தும் அட்டாக் வரும் என்கிறார். எல்லோரும் என்னை துரோகி என்று அழைக்கிறார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

“நான் சில நண்பர்களுடன் படங்களை பகிர்ந்துள்ளேன். யார் அதை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் அமைதியின்றி இருக்கும்போது நான் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறேன்.  பாகிஸ்தான் அணி டீ சர்ட் அணிந்து கொண்டு பார்த்ததால் தனது வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது” என்றார்.

அடையாளம் காண விரும்பாத குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது , “இந்தியாவை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கேட்கும் வீடியோவும் சன்யாமிடம் உள்ளது. அவர் இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்? இது தான். வருத்தம்.” ஜெய்ஸ்வால் கலக்கமடைந்துள்ளார். “நான் மிகவும் சோகமாக உணர்கிறேன்,” என்று அகூறினார்.

ஜெய்ஸ்வாலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் கோரி, இந்தியக் கொடியுடன் அவரது படங்களை ட்வீட் செய்த வலதுசாரி ஆர்வலரான ஹிமான்ஷு படேல், “இந்தப் படத்தை நான் ஒரு குழுவில் பெற்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளேன். கௌ ரக்ஷக் தளத்தின் மூத்த தலைவர்களுடன் நான் பேசி வருகிறேன், புதன்கிழமை புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

ஜெய்ஸ்வாலின் தந்தை 72, கூறுகையில், “பல ஆண்டுகளாக எங்களை அறிந்தவர்கள், நாட்டின் மீது எங்களுக்குள்ள அன்பை கேள்விக்குள்ளாக்குகின்றனர். மேலும் எங்களை ‘தேச விரோதிகள்’ என்று அழைக்கின்றனர். பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருவது எங்களை காயப்படுத்தியுள்ளது. நான் ஒரு இதய நோயாளி, மன அழுத்தத்தைக் கையாள்வது கடினமாக இருக்கிறது என்றார்.

எஸ்எஸ்பி (பரேலி) சத்யார்த்த அனிருத்தா பங்கஜ் கூறுகையில், “இந்த சம்பவம் துபாயில் நடந்தது, இது எங்கள் நாட்டிற்கு வெளியே உள்ளது. இதனால் எங்கள் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ளது. எனவே, ட்விட்டரில் வரும் புகார்களின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது” என்றார்.

Categories

Tech |