Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது விவசாயிகளுக்கு தேவையான சலுகைகளை அறிவித்து வருகிறார். தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 50,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75 சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 கூடுதல் ஊக்கத்தொகையாக நாளை முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-2022 காரிப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதனை போல இந்த ஆண்டு காரீப் கொள்முதல்2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒன்றிய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரங்களை சாதாரண ரக நெல் குவிண்டா ஒன்றுக்கு ரூ.2040 என்றும் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 என்று நிர்ணயம் செய்துள்ளது. அதனைப் போல தற்போது சாதன நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 என்றும் சன்னரக நெல் குவினண்டால் ஒன்றுக்கு ரூ.2160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு இந்த ஊக்கத்தொகை நாளை முதல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |