Categories
உலகசெய்திகள்

“அடுத்ததாக பிரான்சுக்கான எரிவாயு வழங்களை நிறுத்திய ரஷ்யா”… இதுதான் காரணமாம்..?

ஐரோப்பாவின் பிரதான நிறுவனத்திற்கு எரிவாயு வழங்குவதை மொத்தமாக நிறுத்துவதாக ரஷ்யாவின் gazprom நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதாவது வியாழக்கிழமை முதல் எரிவாயு வழங்கல் தொடராது என அறிவித்திருக்கின்ற நிலையில் குளிர் காலத்திற்கான ஐரோப்பாவின் எரிசக்தி வளங்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரையிலான பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் ஜெர்மனிக்கான எரிவாயு வழங்கல் நிறுத்தப்படுவதாக gazprom அறிவித்திருக்கிறது.

இந்த சூழலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிரான்சுக்கான எரிவாயு வளங்களை நிறுத்துவதாகவும் தொடர்பு உடைய நிறுவனம் முழு கொள்ளளவையும் செலுத்தும் வரையில் இது தொடரும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பிரான்சின் engie நிறுவனம் ஜூலை மாதத்திற்கான தொகையை இதுவரை செலுத்தவில்லை என gazprom நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் Nord stream திட்டத்தில் ஒன்பது சதவிகிதம் பங்குகளை கொண்ட engie நிறுவனம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்து இருக்கின்றது. மேலும் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் engie நிறுவனத்திற்கு எரிவாயு வழங்கல் கணிசமாக குறைத்து இருக்கிறது. ரஷ்யா இந்த நிலையில் எரிவாயு வளங்களை ரஷ்யா ஆயுதமாக பயன்படுத்தி பழி வாங்குவதாக பிரான்ஸ் எரிசக்தி துறை அமைச்சர் Agnes pannier runacher கூறியுள்ளார்.

Categories

Tech |