சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வர மேயர் பிரியா ராஜன் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. அதாவது மாநகராட்சிக்கு உள்ளிட்ட இடங்களில் காலியாக இருக்கும் கடைகள் ஒருமுறை மெகா ஏலத்திற்கு விடப்படும். இதில் பதிவு செய்யாத வர்த்தகர்களும் கலந்து கொண்டு ஏலம் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓராண்டிற்கான ஒப்பந்தம் தொகையை செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ள இந்த வாய்ப்பு வர்த்தகர்களுக்கும் வர பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாநகராட்சி வருவாய் ஈட்டும் நடவடிக்கை ஆகவும் அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சி பொருத்தவரை 117 கடைகள் காலியாக உள்ளது. 5 வது மண்டலத்தில் உள்ள டராயபுரம், பாப்பின்ஸ் பிரேட்வே ரோடு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், குருவாப்பன் தெரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், குருவாப்பன் தெரு, சிபி ஆத்தனார் சாலை ஆகியவற்றில் 25 கடைகள் உள்ளது. அதனைப் போல தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உள்ளிட்ட ஆர்.ஏ.புரம் கிராஸ் தெருவில் 55 கடைகள் உள்ளது. மொத்தமாக பயன்பாட்டில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட கடைகளில் ஷாப்பிங் காங்கிரஸ் மட்டுமே 134 ஆகும். இவற்றை சரியான முறையில் வாடகைக்கு விட்டால் போதிய வருவாய் ஈட்ட முடியும்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறியது, கடைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் ரூ.17.76 கோடி. தற்போது காலியாக உள்ள கடைகளை வாடகைக்கு விட்டால் ரூ.2.4 கோடி கிடைக்கும். ஏற்கனவே ரூ.23 கோடி வாடகை பாக்கி இருக்கிறது. இதனை பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட பர்மா பஸாரில் 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தோம் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து வர்த்தகர்களுக்கும் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த முறை சென்னை மாநகராட்சி அமலில் இருக்கிறது. இதனை உரிய கட்டணம் செலுத்தி 9 ஆண்டுகள் வரை நீடித்துக் கொள்ள முடியும். அதன்பிறகுமீண்டும் ஏலத்திற்கு விடப்படும் என்பது குறிப்பிட்டுத்தக்கது. இதனை தவிர மாநகராட்சி கூடுதல் பல்வேறு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ரூ.15 கோடி மதிப்பிலான மாநகராட்சி சொந்தமான நிலத்தை சென்னை மெட்ரோவிற்கு வழங்குதல், நிர்வாக திட்டத்தின் கீழ் பழுதடைந்த தெரு விளக்குகளை ரூ.7 கோடி மதிப்பில் சீர் செய்தல், பாதுகாப்பான கழிவறைக்கு ரூ.18.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தல், CMRL நிதி உதவியுடன் சென்னையில் ரூ.3.49 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது, 136 மற்றும் 146வது வார்டுகளில் உள்ள இரண்டு அம்மா உணவுகளை இடிப்பது, ராயபுரத்தில் எல்பிஜி தகன மேடை ரூ.2.5 கோடி அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.