Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில்.. 26 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு…!!!!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம் போன்றவற்றை ஊரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் போலீஸர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனது சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் செல்போனில் வரும் லிங்க் youtube விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ்ர் செல்போன்கள் மற்றும் பணம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு அதை மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமை தாங்கி 26 லட்சம் மதிப்புள்ள 131 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் youtube விளம்பரம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் போன்றோரின் பணம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 100 ரூபாயும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |