Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப்டம்பர் 1)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (செப்டம்பர் 1) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் நாளை  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமணி ஓ.எம்.ஆர் பகுதி, லட்சுமணன் நகர் ,பெருங்குடி, பாலவாக்கம் பகுதி ,ஹரிவர்த்தன் தெரு, சந்தோஷ் நகர் மெயின் ரோடு பகுதி, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்:

வீரபாண்டி மற்றும் உடுமலை ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் 1-ந்தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி துணைமின் நிலையம்: தந்தை பெரியாா் நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள எம்.எஸ்.டையிங் பகுதிகள், ஆா்.ஆா்.டையிங் சுற்றியுள்ள பகுதிகள், நத்தகாடு தோட்டம் பகுதிகள்.

உடுமலை துணை மின் நிலையம்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், சோமவாரபட்டி, ஆா்.பி.நகா், பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக்கோட்டை.

Categories

Tech |