Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே நடிக்கும் பிரின்ஸ்”…. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான பட அப்டேட்…. உற்சாகத்தில் ரசிகாஸ்…!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1-ம் தேதி அதாவது நாளை வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Categories

Tech |