Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்க்கு வந்தபடி பேசிய DMK…! தலையில் கொட்டி அனுப்பிய நீதிபதி… கிண்டல் அடித்த  ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு இந்த விடியாத அரசாங்கம் கிட்டத்தட்ட 50,000 ரூபாய்,  25 ஆயிரம் ரூபாய் படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் 12ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் டிகிரி பஸ் ஆகியிருந்தால், 2பேருக்கும் ஒரு சவரன் நகை  யார் கொடுப்பார்கள் ? இந்த விடியாத அரசு என்ன ஆச்சு ? 50 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் ரூபாய். 25 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் ரூபாய். 25 ஆயிரம் ரூபாய் எங்கே ?  ஆயிரம் ரூபாய் எங்கே ? இன்றைக்கு அந்த திட்டமே க்ளோஸ்.

அந்த மாதிரி ஒரு தலைவர் அடிதட்டு மக்கள்,  அவருடைய வாழ்க்கை நிலை, மக்களுடைய நாடு துடிப்பை பிடித்து பார்த்து, அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பதுதான் மாபெரும் தலைவராக உருவெடுக்க முடியும், அந்த வகையில் தான் பேரறிஞர் அண்ணாவும் சரி, புரட்சித்தலைவரும் சரி அதே போன்ற அம்மாவும் சரி நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இலவச டிவி, அதுவும் டிவி எதற்கு கொடுத்தார்கள் ? இவர்களுடைய கேபிள் நெட்வொர்க். அதை டிவியில் மாட்ட வேண்டும், அதில் கிட்டத்தட்ட சன் டிவி, ஜெமினி டிவி, உதயா டிவி, சன் நியூஸ், சுமங்கலி கேபிள் இப்படி எல்லா டிவியும் இருக்கிறது. கேபிளில் மாட்டி அதெல்லாம் பார்க்க வேண்டும். அதற்கு ஒரு டிவியை கொண்டு வந்து, அதற்கு பணத்தை செலவு செய்தார்கள்.

இதெல்லாம் ஊதாரி திட்டங்கள், உருப்படியான திட்டங்கள் மக்களுடைய வாழ்க்கைப் பொருளாதாரம், வாழ்க்கையினுடைய சமூக நிலை, கல்வி நிலை இதெல்லாம் ஏற்றக் கூடிய வகையில் திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் நிச்சயமாக அதெல்லாம் தப்பே சொல்ல முடியாது. இதெல்லாம் உச்சநீதிமன்றதிற்கு தெரியுது. இதை ஊடகத்தில் போய்,   எல்லோரையும் தான்தோன்றித்தனமாக, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினால் அதை ஏற்றுக் கொள்வார்களா?அதான் சரியாக உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டு, கொட்டி இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |