செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திராவிட மாடல் அரசு என்பது என்ன ? முழுக்க முழுக்க சட்ட ஒழுங்கை மோசமாக்குவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, தமிழ்நாட்டு ஒட்டுமொத்த கொலை, கொள்ளையினுடைய ஒரு மாநிலமாக உருவாக்குவது, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், அதேபோல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தராமல் இருப்பது, இது போன்ற விஷயங்கள் முன்மாதிரியாக இருப்பது தான் திராவிட மாடல் என்று சொல்கிறோம்.
நிதி அமைச்சர் பிடிஆர் மீது அன்றைக்கு செருப்பு வீசிய போதே கருத்து கேட்ட ஊடக நண்பரிடம் நான் சொன்னேன், செருப்பு வீசியது தப்பு, அதற்கு முன்னாடி யார் காரணம் ? என்று பார்த்தால் பி.டி.ஆர் தான். அவர்தான் உங்களுக்கு தகுதி இருக்கா என்று கேட்க வேண்டிய அவசியம் இல்ல, அந்த வார்த்தை கேட்கலாமா? அப்போது இரண்டு பேரிடமும் தவறு இருக்கிறது. தகுதி இருக்கா உங்களுக்கு இங்கே வருவதற்கு என்று கேட்டதும் தப்பு, செருப்பு வீசியதும் தப்பு. அதை நியாயப்படுத்த மாட்டேன்.
அண்ணாமலை இதை வைத்து அரசியல் செய்வோம் என பேசியதாக பரவி வரும் ஆடியோவை பொறுத்தவரையில் ஒரே விஷயம் என்னவென்றால், அது ஊர்ஜிதப்படுத்தாமல் என்னால் சொல்ல முடியாது. இன்றைக்கு சேனலில் நான் பார்த்தேன், என்ன போடுகிறார்கள், திரு அண்ணாமலை அவருடைய குரல் போல் இருப்பதாக தெரிகிறது என்று தான் போடுகிறார்கள், அண்ணாமலை குரல் என்று சொல்லவில்லையே. நீங்கள் ஊர்ஜிதப்படுத்தி சொல்லுங்கள் நாளைக்கு இந்த இடத்தில் நான் பதில் சொல்கிறேன் என தெரிவித்தார்.