Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவுக்கு முன்….. ஜடேஜா இறங்கியதற்கு என்ன காரணம்?…. இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பாகவே என்னை ஏன் அனுப்பினார்கள் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்..

ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 28 ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வெற்றி கணக்கை தொடங்கியது இந்திய அணி. கடந்தாண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த போட்டியில் அவர்களை வீழ்த்தி தங்களது பலத்தை நிரூபித்து காட்டியுள்ளது இந்தியா..

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கி 19.5 ஓவரில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ் குமார் 4 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர்.. இதையடுத்து இந்திய அணி 148 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய போது ரோகித் சர்மா 12, கே.எல் ராகுல் 0, என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் விராட் கோலி சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். அதே போல ஜடேஜாவும் சிறப்பாக ஆடி 35 ரன்கள் குவித்தது வெற்றிக்கு உதவியது.. இறுதியில் கடைசி ஓவரில் 3 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தார். ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசியதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்த போட்டியில் ஒரு வித்தியாசமான முயற்சி இந்திய அணியில் நடைபெற்றது. அதாவது 4ஆவது வீரராக சூர்யகுமார் யாதவுக்கு முன்பாகவே ரவீந்திர ஜடேஜாவை அனுப்பியது அனைவரது மத்தியிலும் ஒரு கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் இதுகுறித்து ஜடேஜா பேசியதாவது, இந்தப் போட்டியின் போது இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அந்த மிடில் ஓவரில் பந்து வீச இருந்ததன் காரணமாக இடது கை பேட்ஸ்மேனான என்னை அனுப்பினார்கள்..

ஏனென்றால் டாப் ஏழு7 பேட்ஸ்மேன்களில் நான் மட்டும்தான் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.. எனவே நான் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன். நல்லபடியாக எனது ஆட்டம் இந்த போட்டியில் சிறப்பாக அமைந்து விட்டது என்று தெரிவித்தார்.

தொடக்கத்தில் விராட் கோலி 35 ரன்கள் அடித்ததை போலவே, ஹர்திக் பாண்டியா உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஜடஜா 35 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |