Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் TV கொடுத்தாரு ..! மின்சாரம் கொடுத்தீர்களா ? அரசை நோக்கி நறுக் கேள்வி…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, நீங்க தேர்தல் நேரத்தில், ஒரு மாவு அரைக்கின்ற இயந்திரம் கொடுக்கின்றீர்கள் அதுதான் இன்னும் எங்கள் வீட்டில்அரைக்கின்றதா?  ஐயா கருணாநிதி அவர்கள் தொலைக்காட்சி கொடுத்தார்கள். அதுல தான் இன்னும் எங்கள் அம்மா படம் பார்க்கிறார்களா? இதெல்லாம் என்ன ஒரு கேள்வி இருக்கிறது. மடிக்கணினி கொடுத்தீர்கள் சரிதான், அதை இயக்குவதற்கு மின்சாரம் கொடுத்தீர்கள் என்றால் பதில் இல்லை.

சைக்கிள் கொடுத்தோமே, பேக் கொடுத்தோமே, படிக்கிற பிள்ளைகள் ஒரு சைக்கிள், பை வாங்கி கூட படிக்க முடியாத அளவிற்கு ஏழ்மையில் வறுமையில் வைத்திருக்கிறீர்கள். கல்வி கடனை தள்ளுபடி செய்தேன் என்கிறீர்கள், உங்க எல்லாருக்குமே சொல்கிறேன், மனசான்றோடு பேச வேண்டும். கல்வி என்பது மானுட உரிமை, அறிவை வளர்க்கும் கல்வி மானுட உரிமை, அது கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இந்த கல்வியையே நான் கடன் வாங்கி படிக்கிற நிலைமைக்கு வைத்தது யார் ?

இது மாதிரி உலகத்தில் எந்த நாட்டில் இந்த கொடுமை இருக்கிறது. அது வர வேண்டியது, தள்ளுபடி செய்ய வேண்டியது. தள்ளுபடி செய்கின்ற பணத்திற்கு ஒழுங்கா தரமான கல்வியை கொடுத்திருந்தாலே போதும். பிறகு வேளாண் கடன் தள்ளுபடி, ஒரு தடவை தள்ளுபடி செய்கிறார், பிறகு அடுத்த ஆட்சி வரும் போது தள்ளுபடி செய்கிறீர்கள்.

அப்போது முதலில் கடனை தள்ளுபடி செய்யும்போது, மறுபடியும் கடனாளி ஆகிறார்கள். அப்போது என்ன கேள்வி வருகிறது ? ஏன் வேளாண் குடிமகன் கடனாளியாக இருக்கிறார் ? அதற்கு காரணம் என்ன? அதை கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்து அதை நீக்கி, அவர்களை வாழ வைப்பதற்கு வழி இல்லாமல் மறுபடியும் கடனை தள்ளுபடி செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |