திமுகவில் புதிதாக இணைந்தவர்களிடம், கட்சி தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இங்கே 55,000 பேர் இருக்கிறோம். ஒருவர் தலா 10 வாக்குகளை நாம் பேசி வாங்கினால் ஏறத்தாழ ஐந்தரை லட்சம் வாக்குகளை நம்மால் பெற்றிட முடியும் என்பது மனதிலே வைத்து, வரக்கூடிய தேர்தல் என்பதை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட்டிட வேண்டும்.
நம்முடைய கழகத்தில் இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகளுக்கும் இப்போது பணியாற்றக்கூடிய நிர்வாகிகளுக்கும் அன்பான வேண்டுகோளாக சொல்வது, இயக்கத்திலே தங்களை புதிதாக இணைத்துக் கொண்டவர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுத்து, இந்த தேர்தல் களத்தில் நாம் கரம் கோர்த்து வெற்றிக்கு உறுதுணையாக பாடுபட்டிட வேண்டும்.
தமிழர்களுக்கான மக்கள் அடித்தட்டு மக்களுக்கான, ஏழை மக்களுக்கான, அனைத்து தரப்பட்ட மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியை நடத்தக்கூடிய நம்முடைய அமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் தமிழகத்திலே செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 39க்கு 39 திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது,
நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள் என தங்களை இணைத்துக் கொண்ட அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினோம் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.