ஓடிக்கொண்டிருந்த போதே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் அன்னை நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உத்தமசோழபுரம் அருகே சென்ற போது திடீரென கார் இஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்து தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் இருந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.