Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ1,200….. வீடு புகுந்து திருட்டு….. 14…. 15….. வயது சிறுவர்கள் கைது…..!!

திருவள்ளூரில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் வசித்து  வரும் பேச்சிமுத்து என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வசூலான பணத்தை நேற்றைய தினம் வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர் உடன் பேசுவதற்காக வெளியே சென்றார்.

அப்போது நண்பருடன் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது அவரது வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடுவதை கண்டார். பின் சந்தேகமடைந்த அவர் இருவரையும் ஓடி மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் ரூபாய் 1200 அவர்களது பையில் இருந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்க,

அவர்கள் பேச்சிமுத்து வீட்டிலிருந்து திருடியதை ஒப்புக் கொள்ளவே இரண்டு சிறுவர்களும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் பன்னூர், மொளசூர் கிராமத்தை சேர்ந்த 15 மட்டும் 14 வயது சிறுவர்கள் என்று தெரியவர அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |