Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சுழலில் சிக்கிய வங்கதேசம்…. 128 ரன்களை சேஸ் செய்யுமா ஆப்கான்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி  7 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்தது.

கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் மோதியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.. அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது நயிம் 6 மற்றும் அனாமுல் ஹக் 5 ஆகிய இருவரும் முஜீப் உர் ரஹ்மான் சுழலில் சிக்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேபோல வந்த வேகத்தில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 11 ரன்னில் அதே முஜீப் பந்துவீச்சில் போல்டாகி நடையை கட்டினார்..

அதன்பின் வந்த முஷ்பிகுர் ரஹீம் 1 மற்றும்  அஃபிஃப் ஹொசைன் 12 ரன்களில் எடுத்தநிலையில், ரஷீத் கான் இருவரையும் வெளியேற்றினார். இப்படி அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அதிரடியாக ஆட முடியாமல் திணறியது வங்கதேசம்..  இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.. அதிகபட்சமாக மொசாடெக் ஹொசைன் மட்டும் சிறப்பாக கடைசி கட்டத்தில் ஆடி  48* (31) ரன்கள் எடுத்தார். மேலும் மஹ்முதுல்லாஹ் 25 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Categories

Tech |