Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் வீட்டை இடிக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் குளம், பிள்ளைக்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை அப்பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என தனி நபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலதாமதம் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் வருகின்ற 1-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதனையடுத்து நேற்று தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கீற்று கொட்டகைகள், வீட்டின் முகப்பு பகுதிகள் போன்றவற்றை பொக்லைன்  இயந்திரம் மூலம் அகற்றினர்.

அதன் பின்னர் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற சென்றனர். ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்டம் உதவி ஆட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாற்று இடம் வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றனர். அதன்பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |