Categories
உலக செய்திகள்

“எரிபொருள் தட்டுப்பாடு” இந்தியா உட்பட 10 நாடுகளின் முக்கிய முடிவு…. அமைச்சரின் தகவல்…!!!!

இலங்கை நாட்டில் அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதோடு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய பொருள்கள் தயார் செய்யும் நாடுகள் இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை நீண்ட கால அடிப்படையில் விற்பனை செய்யலாம் என கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

இந்நிலையில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகள் ஏரி பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானங்களை இலங்கை அமைச்சரவை குழு பரிசீலனை செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த அறிவிப்பை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார். மேலும் இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கையில் 50 பெட்ரோலியம் நிறுவனங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |