அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஹைதராபாத் பெங்களூரில் படத்தை விளம்பரம் செய்துள்ளார் விக்ரம். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர் கூட்டம் கூடியது. மேலும் கேரளாவில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளார். கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் மியா. விழா மேடையில் பேசிய மியா கூறிய போது கோப்ரா படப்பிடிப்பு தொடங்கிய போது நான் சிங்கிளாக இருந்தேன். கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருந்தது அப்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது மீண்டும் இடைவெளி விட்டு படபடப்பை தொடங்கியுள்ளார்கள். அப்பொழுது நான் கர்ப்பமாக இருந்தேன் பட ரிலீஸ் என்பது குழந்தையுடன் வந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அப்பொழுது பார்வையாளர்களும் அமர்ந்திருந்த மியா ஜார்ஜின் கணவர் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து இதுதான் கோப்ரா பேபி என அறிமுகம் செய்து வைத்துள்ளார் விக்ரம் இதை கேட்டு அங்கிருந்து அனைவரும் மகிழ்ச்சி ஆவாரம் செய்துள்ளனர்.
Categories
கேரளாவில் நடந்த விளம்பர நிகழ்ச்சி… கோப்ரா பேபியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விக்ரம்…!!!!!!
