Categories
உலக செய்திகள்

கனடாவில் கொண்டாடப்பட்ட தமிழர் திருவிழா… வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள்…!!!

கனடா நாட்டில் தமிழர்களின் பாரம்பரியமான உணவுகளுடன் தமிழ் தெரு திருவிழா கோலாகலமாக,  கொண்டாடப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் உள்ள Scarborough நகரத்தில் தமிழர் தெரு விழா கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக நடந்திருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில், பிரமாண்டமாக தெரு திருவிழா நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த் என்னும் தமிழ்ப்பெண் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த திருவிழாவிற்கு, பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் இப் வந்திருக்கிறார். அதில், தமிழர்களின் பாரம்பரியமான உணவு வகைகள் சமைத்து பரிமாறப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Categories

Tech |