Categories
தேசிய செய்திகள்

அடடே! இது வேற லெவல் அப்டேட்…. விரைவில் 5ஜி சேவை அறிமுகம்…. ஜியோ நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு….!!!!

ஜியோ நிறுவனம் அடுத்த வருடத்திற்குள் 5 தேவை இந்தியா முழுவதும் செயல்முறைக்கு வரும் என்று கூறியுள்ளது.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 45-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு 5ஜி சேவை இந்தியா முழுவதும் வருகிற 2023-ஆம் ஆண்டுக்குள் செயல் முறைக்கு வரும் என்று கூறினார். அதன் பிறகு டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வருகிற தீபாவளிக்குள் 5 ஜி சேவை அமுலாகும் என்றும் கூறினார். இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை ஏற்கனவே சுற்றுச்சூழல் கட்டமைப்பும் மற்றும் குறைந்த விலையும் கொண்டு இருப்பதால், 5ஜி என்.எஸ்.ஏ 4ஜி மையத்திற்கு மேல் ஒரு அடுக்காக செயல்பட முடியும்.

ஆனால் 5ஜி எஸ்ஏ அமைப்பை செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன் காரணமாக ஜியோ அமைப்பு நேரடியாக 5ஜி எஸ்ஏ அமைப்பிற்கு செல்ல இருப்பதாக அம்பானி கூறியுள்ளார். இதனையடுத்து பாரதி ஏர்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டால் 5ஜி என்எஸ்ஏ தேர்வானது இந்திய சந்தைக்கு மிகவும் மோசமானது என்று கூறியுள்ளார். ஆனால் எதிர்காலத்தில் பல நிறுவனங்கள் 5 ஜி என்எஸ்எ சேவையிலிருந்து 5ஜி எஸ்ஏ சேவைக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த செலவை ஜியோ முன்னதாகவே செலுத்தி வருகிறது. மேலும் 5ஜி சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விரைவில் செலுத்தும் நடவடிக்கைகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Categories

Tech |