Categories
மாநில செய்திகள்

ஜெ.தீபா மருத்துவமனையில் அனுமதி…. இது தான் காரணமா…? வெளியான தகவல்….!!!!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா. திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது, எனது மனைவி தீபா என்னைப்பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது.

நான் தான் அவரை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

Categories

Tech |