தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுவதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேரூந்துகளையே விரும்புகின்றனர். தனியார் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்களை நிர்ணயித்து கொள்வதால் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரித்து வசூலித்து வருகின்றது.
இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து திருச்சிக்கு 800 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம் தற்போது 1900 ரூபாயாகவும், கோவைக்கு ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 2,500 ஆகவும்,வெள்ளை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1400 ரூபாயாகவும் இருந்த கட்டணம் 2,500 ரூபாயாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.