தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படம் சர்வம் தாள மையம் ஒழிப்பதிவாளர் ராஜுமேனன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினித், குமரவேல் போன்றோர் நடித்திருக்கின்றனர். இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு கொண்டுவரப்படுகின்றது. அதை இன்ஸ்டாகிராமில் ஏ ஆர் ரகுமான் பதிவிட்டு இருக்கின்றார். வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி ஜப்பான் மொழியில் இந்த படம் வெளியாகின்றது. இது பற்றி பிரமோஷன் நிகழ்ச்சி ஜப்பானில் நடைபெறுகின்றது. இதில் ஜிவி பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, ராஜுமேனன் போன்றோர் கலந்து கொள்கின்றனர். ஆனால் ஏ ஆர் ரகுமான் செல்வது பற்றி இன்னும் உறுதியாக வில்லை.
Categories
அக்டோபர் 1 ம் தேதி… ஜப்பானில் ரிலீஸ் ஆகும் அபர்ணா பாலமுரளி படம்…!!!!!!
