Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிக்க முயற்சி – சிக்கிய மர்ம நபர்

பணி முடிந்து வந்தவரிடம் மர்ம நபர் கைபேசி பறிக்க முயற்சி

போரூர் அருகே திருமுல்லைவாயில் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் இரவு பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை நான்கு மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது கோயம்பேடு சாலையில் கைபேசியில் பேசியபடி நடந்து சென்றுள்ளார்

அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் விஜயை  தாக்கிவிட்டு விஜயின் கையிலிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை கண்ட மக்கள் மர்ம நபரைதுரத்தி பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் கோயம்பேடு சேர்ந்த கிஷோர் என்னும் தகவல்வெளிவந்துள்ளது.

Categories

Tech |