Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!!

புதுச்சேரியில் 2022ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூபாய் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.. அதேபோல அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்றும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |