பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியிடம் அந்த நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி உதவி கோரி இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநீதியம் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணயம் ஒப்புதல் அளித்து இருக்கின்றது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் விவாதிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் ஏழு மற்றும் எட்டாவது தவணையாக பாகிஸ்தான் 1.17 பில்லியன் டாலர்களை விடுவிக்க அனுமதி அளித்து இருக்கின்றது.
இது தொடர்பாக பாகிஸ்தான் நிதி மந்திரி இஸ்மாயில் கூறும் போது பாகிஸ்தானின் இ எப் எப் திட்டத்தை புதுப்பிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வாரியம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. என கூறியுள்ளார். மேலும் நாம் தற்போது ஏழாவது மற்றும் எட்டாவது தவணையாக 1.17 பில்லியன் டாலர்களை பெற வேண்டும் பல கடினமான முடிவுகளை எடுத்து பாகிஸ்தானை இயல்பு நிலையில் இருந்து காப்பாற்றியதற்காக பிரதமர் ஷெரீப்புக்கு நன்றி கூற விரும்புகின்றேன். நம் தேசத்தை வாழ்த்துகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மற்றொரு ட்விட்டர் பதிவில் எங்களின் ஐஎம்எப் திட்டத்திற்கு புத்துயிர் அளித்த நிதி இடைவெளியை நிறைவேற்ற உதவிய சீனா, சவுதி அரேபியா, கர்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு நன்றி கூற விரும்புகின்றேன். ஐ எம் எப் உலக வங்கி ஏடிபி ஏ ஐ ஐ ஐ பி& ஐடிபி போன்றவை பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவிற்காக நான் நன்றி கூற விரும்புகின்றேன். மேலும் ஆதரவளித்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுக்கும் நன்றி என அதில் இஸ்மாயில் கூறியிருந்தார்.