ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகரத்தில் அங்கிதா குமாரி(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரின் தாயார் சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார். அதே பகுதியில் சேர்ந்த முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் அங்கிதாவை காதலிக்கும்படி பல நாட்களாக வற்புறுத்தி வருகிறார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அங்கிதாவின் செல்போன் என்னை பெற்ற ஷாருக் தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அங்கிதா தனது தந்தையிடம் கடந்த 22ஆம் தேதி அன்று இரவு தெரிவித்துள்ளார். இது குறித்து ஷாருக்கின் குடும்பத்திடம் நாளை பேசுவோம் என்று அங்கிதாவின் தந்தை கூறியுள்ளார். அதன் பிறகு அன்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள அறையில் உறங்கி உள்ளார்.
அப்போது நள்ளிரவு அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்த ஷாருக் ஜன்னல் வழியாக அங்கித் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீ அங்கிதா மீது பிடித்தது. உறங்கிக் கொண்டிருந்த அங்கிதா தன் உடல் தீயில் எரிவதை உணர்ந்து விழித்து அலறி உள்ளார். இவரின் அலற சத்தத்தம் கேட்டு அங்கிதாவின் தந்தை அறைக்கும் ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிதா தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடலில் போர்வையே கொண்டு அனைத்து உள்ளார். இதனையடுத்து படுகாயம் அடைந்த அங்கிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 45% தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடுமையாக தீக்காயங்களோடு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அங்கிதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் தனது மரண வாக்குமூலத்தில் காதலிக்க மறுத்ததால் ஷாருக் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் சாருஹாசனை கைது செய்து, அவரது கூட்டாளியான நயீம் கான் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஷாருக் ஹசன் கைது செய்யப்பட்டு போலீசார் அழைத்துச் செல்லும்போது அவர் சிரித்துக் கொண்டே நடந்து செல்ல வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் இந்து- இஸ்லாமிய மதரீதியிலான மோதலை ஏற்படுத்த வழி வகுத்ததால் தும்கா பகுதியில் 144 தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.