Categories
தேசிய செய்திகள்

ஒரு அப்பளத்துக்காக…. பறந்த மேஜை, உடைந்த மண்டை, சிதறிய உறவினர்கள்…. போர்க்களமான கல்யாண மண்டபம்….!!!!

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் ஒரு திருமணம் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மணமகன் முட்டம் மற்றும் மணமகள் திருக்குன்றபுழாவை சேர்ந்தவர்கள். இந்த திருமண நிகழ்ச்சி மாப்பிள்ளையில் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள விருந்து நடந்த மண்டபம் கலவரமானது.

அப்போது மாப்பிள்ளை நண்பர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டார் மற்றும் மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர். இதனால் பிரச்சனை பெரிதாக ஆகியது. இதனால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாறி மாறி இரு தரப்பினரும் மோதிக்கொள்ள மண்டப ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரு தரப்பினரை அங்கிருந்து விரட்டி அடித்து. அதன் பிறகு மண்டப உரிமையாளர் முரளிதரன் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வைரலாகி வருகிறது.

Categories

Tech |