Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்லுற கடைசி நேர பேச்சு…! ADMK கட்சியே போச்சு… சொல்லி சொல்லி புலம்பும் பெரும் தலைகள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஜூலை 11ஆம் தேதி  எடப்பாடி  அடியாட்கள் நடத்திய பொதுக்குழு என்று சொல்லுகின்ற கூட்டத்தில்,  மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் கட்சி தேர்தல் நடத்துவோம் என்பது எடப்பாடி எடுத்த தீர்மானம். கட்சி தேர்தலை  டிசம்பர் மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நடத்தி, கிளைக் கழக தேர்தல் நடத்தி, கிளைக் கழக செயலாளர்கள் மூலமாக கட்சி உடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்தோம்.

இதன் பிறகு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டு தான் ஒன்றியம், நகரம், மாவட்ட நிர்வாகிகள், செயலாளர் உட்பட அத்தனை பதவிகளுக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் பட்டியலை 29.04. 2022-ம் தேதி தான் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கிறோம், அவர்கள் அனுமதி கொடுத்து, சீல் வைத்து, கையெழுத்து போட்டு, அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள்.

அங்கீகாரம் கொடுத்து 14 வது நாளில் பொதுக்குழுவை கூட்டுவதற்காக கையெழுத்து போட்டு ஓபிஎஸ், ஐபிஎஸ் கடிதம் அனுப்பி விட்டார்கள்.அதற்கு முன்னதாக 14ஆம் தேதி ஜூன் மாதம் மாவட்ட செயலாளர் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் எதற்கு கூட்ட சொன்னார் என்றால்?  அந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் எம்பி, முன்னாள் வாரிய தலைவர், தலைவர் காலத்தில் வேலை செய்தவர்கள், அம்மா காலத்தில் வேலை செய்தவர்களுக்கெல்லாம் எந்த பதவியும் இல்லை.

இந்த ஐந்து வருடத்தில் என்ன செய்தார்கள் ? என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவரோடு அமைச்சர்களாக இருப்பவர்களையும் மாவட்ட செயலாளராக போட்டு,  அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு, யாரு தூதிப்படுகிறார்களோ, யார் இவர்கள் வீட்டில் போய் கைகட்டி நிற்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் கட்சி பதவி கொடுத்துவிட்டு,  உண்மையாகவே கட்சிக்கு உழைத்தவர்களை ஓரம் கட்டி விட்டார்கள், அதனால் அவர்கள்  எல்லாருக்குமே சிறப்பு அழைப்பாளராக அழைத்து வரலாம்.

இல்லையென்றால் அவர்களுக்கு மரியாதையை கம்மியா இருக்கும் என்று ஓபிஎஸ் சொன்னார்கள், மாவட்ட செயலாளாளர்களும் அதை ஆதரித்தார்கள். அதற்குத்தான் அந்த கூட்டம் கூட்டினார்கள். அந்த கூட்டத்தில் எல்லா முடிவுகளும் எடுத்தாச்சு, அந்த கூட்டத்தில் நன்றி சொல்கின்ற நேரத்தில், ஓபிஎஸ்  சில மாவட்ட செயலாளர்களை அழைத்து பேச சொல்லும்போது, அப்போதுதான் ஒற்றை தலைமை என்கின்ற வார்த்தை கொண்டு வருகிறார். இந்த பிரச்சனை இவ்வளவு பெரிய பூதகரமான செய்து,  கட்சியில் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என தெரிவித்தார்.

Categories

Tech |