கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்டை ஒரு நபர் மோசமாக பேசியதை பிரதமர் கடுமையாக கண்டித்திருக்கிறார்.
கனடா நாட்டினுடைய துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், அல்பெர்ட்டா நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்நகரச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் வணிகர்கள் போன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து ஒரு கட்டிடத்தின் லிஃப்டிற்குள் சென்றார்.
அந்த சமயத்தில் ஒரு நபர் அவரின் பெயரை கூறி சத்தமாக கத்தினார். மேலும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது பற்றி கிறிஸ்டியன் தெரிவித்ததாவது, எவரும் எந்த இடத்திலும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் சந்திக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். மேலும், நாட்டின் பிரதமர் கூறியதாவது, பொறுப்பு மிக்க பதவிகளில் பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள், அதிலும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வலிமையுடன் குரல் எழுப்புவதால் இன வெறியுடன் இருக்கும் சிலர் அவர்களை குறிவைக்கிறார்கள் என்பதை அறிகிறோம். நாம் எந்த வகையான நாட்டில் இருக்கிறோம் என்று நம்மிடமே நாம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.