Categories
உலக செய்திகள்

நாசா செலுத்திய ராக்கெட் எஞ்சினில் பழுது…. பாதியில் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

நாசா ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட்டின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இன்று விண்ணில் செலுத்தும் முயற்சியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப ஆர்டெமிஸ்-1 என்ற திட்டத்தை ஆரம்பித்தது. அதன்படி, வரும் 2025 ஆம் வருடத்திற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது இந்த ராக்கெட்டை சந்திரன் பற்றிய ஆய்வுக்காக அனுப்பவிருக்கிறது.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகினர்.  ஆய்விற்காக ஓரியன் விண்கலத்தை, ஏந்தி கொண்டு இந்த ராக்கெட் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சென்றது.

இந்நிலையில் திடீரென்று தொழில்நுட்பத்தில் பழுது உண்டானது. எனவே, புறப்பட்ட நாற்பதாவது நிமிடத்தில் அதனை நிறுத்தினர். இதனையடுத்து, ஆர்டெமிஸ்-1 ஹைட்ரஜன் குழுவினர், அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் ராக்கெட் ஏவுதல் இயக்குனரோடு ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.

Categories

Tech |