Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற என்ஜினியர்….. பின்னர் நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் அகஸ்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மதுசூதன பெருமாள்(24). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான அழகியபாண்டியபுரத்திற்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலையில் தெரிசனங்கோப்பு அருகில் உள்ள பழையாற்றில் குளிக்க சென்றார். சிறிது நேரத்தில் மதுசூதன பெருமாள் உடல் கரையோரம் ஒதுங்கியது. அந்த நேரத்தில் ஆற்றில் குளிக்க வந்தவர்கள் பார்த்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மதுசூதன உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மதுசூதன பெருமாளுக்கு நீச்சல் தெரியாது என்றும் அவர் ஆற்றில் குளித்த போது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார் என்று தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |