ஜெனிவா மற்றும்பாரிஸ் விமானத்தில் சண்டை போட்டதற்காக பிரான்ஸ் விமானிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்ற ஜூன் மாதம் ஏர் பிரான்சின் விமானம் ஜெனீவா -பாரிஸ் பயணத்தின் போது விமானி அறையில் 2 விமானிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே விமானி மற்றும் துணை விமானி இடையில் தகராறு ஏற்பட்டதாக அறிக்கை ஒன்று தெரிவித்தது. இருப்பினும் விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.
இதையடுத்து பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான BEA, சில ஏர்பிரான்ஸ் விமானிகள் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பின் விமானிகளின் இச்சண்டை வெளியே தெரியவந்தது. இதனால் சண்டையிட்ட இருவிமானிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு தணிக்கையை மேற்கொண்டு வருவதாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் BEA-ன் பரிந்துரைகளை பின்பற்றுவதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.