Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என 

மதுரை ஐகோர்ட்டில் சிவ சூர்யா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கல்வி, தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ள இட ஒதுக்கீட்டின்படி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனு தாக்கல் செய்துள்ள சிவ சூர்யா கடந்த 2021-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் மருத்துவ படிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என மனு தாக்கல் செய்துள்ளார். கலை மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு 2 இட ஒதுக்கீடுகளை பிறப்பித்துள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு கட்டாயம் மருத்துவ சீட் வழங்க வேண்டும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 2 இடங்களுமே சாதனை மாணவர்களுக்கானது. இதில் எவ்வித பாகுபாடும் காட்டாமல் மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும். இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கிட்டிற்கு பயனாளர்களை கண்டறிய முடியாது என்ற கருத்தை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 2016-ம் ஆண்டு மனுதாரர் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் என்ற விருதுநகர் பெற்றுள்ளார். எனவே மனுதாரர் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீட்டுக்கு முழு தகுதியானவர். இவருக்கு அடுத்த வருடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு சீட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Categories

Tech |