Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 5…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….. உடனே பாருங்க…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.இந்த வருடம் பாதிப்பு குறைந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தற்போது தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதவிக்கு செப்டம்பர் 5ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இந்த பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் நேர்முகத் தேர்வு கடந்த 18ஆம் தேதியும் நடந்து முடிந்தது.இந்த கலந்தாய்வு சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |