Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ….! “பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளமா…????”

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் ஆயிரம் கோடி சம்பளமாக கேட்டிருந்தாராம்.

மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்தியில் இந்நிகழ்ச்சியானது 15 சீசன்களை கடந்து இருக்கின்றது. இதன் 15வது சீசனை முன்னணி நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இவர் தனது பன்முக திறமைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது சீசனை தொகுத்து வழங்க வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் கேட்டிருந்தார்.

இதைக் கேட்ட பிக்பாக்ஸ் குழு அதிர்ச்சி அடைந்திருந்தாலும் அவரை விட்டுவிடாமல் கேட்டபடியே 1000 கோடியை சம்பளமாக தர முடிவு செய்து இருக்கின்றார்களாம். இதுவரை சல்மான்கான் தரப்பில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லையாம். தென்னிந்திய திரைப்படங்கள் உலக அளவில் 1000 கோடியை வசூல் செய்து வரும் நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நடிகருக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகின்றதா என திரையுலகினர் மெய்சிலிர்க்கின்றார்கள்.

Categories

Tech |