Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னித்து விடுங்கள்… விரைவில் பிரமோஷனில் கலந்து கொள்வேன்… வைரலாகும் கோப்ரா பட இயக்குனர் பதிவு…!!!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஆனந்த் ராஜ் ரோபோ சங்கர் மீனாட்சி கோவிந்தராஜன், மிருனாளனி ரவி ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித் குமார் தயாரித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் பிரமோஷன் பணிகளில் பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சூழலில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அஜய் ஞானமுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றே பகிர்ந்து இருக்கின்றார். அதில் மன்னித்து விடுங்கள் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதனால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என்னுடைய அமேசிங் டீம் ஸ்ரீநிதி செட்டி, மிருனாளினி, ரவி போன்ற அனைவரும் எங்கள் கிங் கோப்ரா விக்ரம் சாரிடம் பிரமோஷன் ஈடுபடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |