ஆலியா பட்டின் பதிவை பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவர் சென்ற ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியா பட் அறிவித்தார். இந்த நிலையில் தனது கர்ப்பகால புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இன்னும் இரண்டு வாரங்களில் வெளிச்சம் வரப்போகின்றது” என பதிவிட்டுயிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அண்மையில் தானே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பின்னர் அதுக்குள்ள எப்படி இரண்டு வாரத்தில் குழந்தை பிறக்கும் என பதிவிட்டு இருக்கின்றார் என குழப்பம் அடைந்தார்கள். இதைப் பார்த்த ஆலியா பட் கணவருடன் தான் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் ரிலீஸை தான் அப்படி குறிப்பிட்டுள்ளேன் என குறும்பாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Cht2gHPsUOf/?utm_source=ig_embed&ig_rid=ae45aedf-c668-47c9-ab80-3b0c157264c8