Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அனைத்துதரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதாவது இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் சாமானியர்களுக்கு இந்த முதலீடு என்பது மிகஅரிதாகும். இந்நிலையில் நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வால் இத்தகைய முதலீடுகளில் சேமிப்பது என்பது முடியாத ஒன்று ஆகும். இதனால் போஸ்ட் ஆபிஸில் மிககுறைந்த முதலீடு வாயிலாக சேமிப்புக் கணக்கை துவங்கலாம். அதன்படி, மாதம் ரூபாய்.250 முதல் சேமிப்பை துவங்கலாம்.

அத்துடன் போஸ்ட் ஆபீஸ் வாயிலாக சேமிப்பதன் மூலம் பணத்துக்கு முழு உத்தரவாதம், வருமானவரி விலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்படும். இந்தியாவிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் வங்கிகளுக்கு இணையாக வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிகமாக போஸ்ட்ஆபிஸில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இப்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கினால் மாதம் ரூபாய். 2,500 வரை லாபம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கணக்கின் வாயிலாக பெறப்படும் வட்டியிலிருந்து கல்வி கட்டணம் செலுத்த எதுவாக இருக்கும். இந்த கணக்கை இந்தியாவிலுள்ள எந்த தபால் அலுவலகத்தில் வேண்டுமானாலும் துவங்கலாம். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய்.1000 முதல் அதிகபட்சம் ரூபாய்.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்குரிய முதிர்வுகாலம் 5 வருடங்கள் ஆகும். இந்த கணக்கை குழந்தைகள் கணக்கில் துவங்கி ரூபாய். 2 லட்சத்தை அவர்கள் பெயரில் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் வட்டி தற்போதைய 6.6 சதவீதத்தில் ரூபாய்.1100 கிடைக்கும். அத்துடன் 5 வருடங்களில் இந்த வட்டி மொத்தம் ரூபாய். 66 ஆயிரமாக மாறும். மேலும் கணக்கு முடிவு இறுதியில் ரூபாய்.2 லட்சம் உங்களது கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

Categories

Tech |